திருப்பரங்குன்றம்: மலை மேல் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 7) உலக முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து 300 அடி உயர திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சென்று அங்குள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

ஒவ்வொரு ஆண்டும் ரமழான், பக்ரீத் பண்டிகைகள் போது இப்பகுதி இஸ்லாமியர்கள் மலை மீது சென்று சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் பாலஸ்தீன மக்களுக்கும் சிறப்பு துவா செய்யப்பட்டது. பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

இந்நிலையில் ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலைத் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதால் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி