திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காரிருள் கனபடை பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமை பூஜை நடைபெற்றது. உலகில் எங்கும் இல்லாத அமைப்பில் மூன்று முகத்துடன் 48 காளிகள் சேர்ந்து தாங்கி நிற்கும் பீடத்தில் நாக ரூபத்தில் காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் பில்லி, சூனியம், நோய் அகலும்.