மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக யாகம் தொடக்கம்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உடனுறை அயோத்தி குருநாதசுவாமி திருக்கோவிலில் மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை பூஜைகள் ராஜா பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கியது. இதில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன. கோவில் தண்டல்க்காரர் வகையறா பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா குழுவினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி