மதுரையில் 'தளபதி கண்ட்ரோல்' போஸ்டர்கள் பரபரப்பு

மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு நாளை மறுநாள் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தொண்டர்கள் நடிகர் விஜயை வரவேற்கும் விதமாக 'ஒட்டுமொத்த மதுரையே தளபதி கண்ட்ரோல்! தளபதி எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல்!' போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 'அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளவர் எப்படி ஆட்சிக்கு வந்து மக்களை காப்பாற்றுவார்?' என பலர் விவாதித்துச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி