மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பல்கலை நகரில் வசிக்கும் மகாலட்சுமி (17) என்ற மாணவி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் வேலை செய்யாமல் செல்போன் பயன்படுத்தியதால் தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி நேற்று (ஆக. 16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.