மதுரையில் இன்று (மே.6) காலை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்ததும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் தோற்றதும் வருத்தமளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தீபம் ஏற்றுவோம் என கூறியதால் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் புலம்புகிறார். எங்களுடைய நோக்கம் தமிழகத்தில் பாஜக வரக்கூடாது என்பதுதான். திமுக - காங்கிரஸ் கூட்டணி 2026 தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது, தேர்தல் முடிந்துவிட்டது' என்றார்.