திருநகரில் சாலை மறியல் போராட்டம்.

மதுரை அருகே திருநகரில் உள்ள யூனியன் வங்கி முன்பாக இன்று (பிப். 12) காலை மத்திய அரசின் தொழிலாளர் நிறுவன சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. மகேந்திரன் இதில் கலந்துகொண்டார். மதுரை-திருமங்கலம் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி