மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில், சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சட்டவிரோதமாக கொடி ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதன் பேரில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி நுழைதல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.