பிரதமர் மதுரை வருகை: வாகனங்கள் நிறுத்த தடை

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 1) மதுரைக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சில சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் ரவுண்டானா சந்திப்பு வரையிலும், மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரையிலும் இந்த தடை அமலில் இருக்கும். பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடங்களில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி