பாஸ்போர்ட் மோசடி. மதுரை விமான நிலையத்தில் ஒருவர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த பெரியசாமி (53) என்பவர், ஓமன், மலேசியா, சவூதி, துபாய் ஆகிய நாடுகளில் 12 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இவர் துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் (பிப். 17) வந்தார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சந்தேகம் எழுந்தது. பழைய, புதிய பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில், திருத்தம் செய்து மோசடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதிய பாஸ்போர்ட்டை எடுத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி