மாற்று பாதை ஏற்படுத்தி கொடுக்க எம்எல்ஏ கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், நீர்வளத் துறைக்குச் சொந்தமான வைகை ஆற்றின் விரகனூர் மதகணை அணையில் புதிய பாலம் அமைக்கும் பணிக்காக, முறையான மாற்றுப்பாதை ஏற்படுத்திக் கொடுக்காமல் மதகணை பாலம் அடைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாப்பான மாற்றுப்பாதையை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே பாலத்தை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி