மதுரை: கேட்க வேண்டிய நேரத்தில் கேட்போம்; திருமாவளவன் பேட்டி

சென்னையில் இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என்பதன் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, அது அவருடைய விருப்பம், கனவு. திமுக கூட்டணி மீது மிக நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் எண்ணற்ற பல நலத்திட்டங்களை இந்த அரசு கொண்டுவந்துள்ளது. ஆகவே திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல் கிடைக்கும். ஆட்சியில் பங்கு என்று சொல்ல வேண்டிய நிலையில் சொல்லுவோம். 

அதற்கான வாய்ப்புகள், சூழல்கள், புறச்சூழல் எல்லாம் அமைய வேண்டும். கட்சி நலம் தாண்டி மக்கள் நலன், நாட்டு நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம். எங்களது கட்சியை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சூழல் வரும் என்றார்.

தொடர்புடைய செய்தி