புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2026 தேர்தலில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரக்கூடாது என்றும், அமைச்சரவையில் பங்களிப்பு இருந்தால் மட்டுமே மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டு அமைச்சரவையில் பங்கில்லை என்றால் அது காலனி ஆதிக்கம் போன்றது என்றும், ஜனநாயக நாட்டில் இது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி அமைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.