துணை முதல்வர் உதயநிதி மதுரை வருகை

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று (ஜூன் 15) இரவு 7: 35 மணி அளவில் விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் இங்கிருந்து சாலை மார்க்கமாக தேனி சென்று தேனியில் இன்றிரவு தங்குகிறார். நாளை (ஜூன் 16) தேனியில் நிகழும் பல்வேறு நிகழ்ச்சி கலந்து கொண்ட பின்பு நாளை இரவு மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார்.

நாளை மறுநாள் (ஜூன் 17) காலையில் சாலை மார்க்கமாக சிவகங்கை சென்று அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு அன்று இரவு மீண்டும் மதுரை வந்து 8 மணி அளவில் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். துணை முதல்வரின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி