மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று முன்தினம் (டிச. 1) உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. இதன் விளைவாக, நீதிமன்ற உத்தரவின்படி இன்று (டிச. 3) மாலை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. பாதுகாப்பு கருதி கோவில் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.