இந்த வாகனங்கள் மீது மோதாமலிருக்க ஷேர் ஆட்டோவை அதன் ஓட்டுநர் திருப்பினார். அப்போது, நிலை தடுமாறிய ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆசிரியை லதா புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த மூன்று ஆசிரியைகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர், மேலும் ஒரு பயணி லேசான காயமடைந்தனர். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்திர தரிசனம்