விருதுநகர் மாவட்டம் உப்புபட்டியை சேர்ந்த இசக்கிமுத்து (36) என்பவர் டெய்லராக உள்ளார். இவர் நண்பர் மகேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று (டிச. 21) சென்றார். இவர்கள் தோப்பூர் அரசு குடிமை பொருள் கோடவுன் அருகே விதிமீறி தவறான பாதையில் சென்றபோது எதிர்திசையில் வந்த லாரி மோதியதில் இசக்கிமுத்து பலியானார். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.