மதுரை: தவெகவிற்கு ஆதரவு.. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி

தவெகவுக்கு ஆதரவளிப்பது பற்றி நேற்றே முடிவு செய்யப்பட்டு விட்டது என்றும், அதுதொடர்பான அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று காலை பேட்டியளித்த அவரிடம் சட்டமன்றத் தேர்தல் முடிவு பற்றி கேட்டபோது, திமுக அரசுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். அதனாலேயே 15 அமைச்சர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர். மேலும் பாஜக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்ற எண்ணத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.

தொடர்புடைய செய்தி