இவ்விழாவில் பங்கேற்க அவர் விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று மாலை மதுரை வந்தார். மதுரையில் தங்குகிறார். நாளை மாலை உசிலம்பட்டிக்கு செல்கிறார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். சசிகலாவின் மதுரை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், 'தலைமைக்கு தகுதியே என்றென்றும் எங்கள் அதிமுகவின் தலைவியே, திசை தெரியாமல் செல்லும் (அதிமுக) கப்பலுக்கு தலைமை ஏற்க வாருங்கள்' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்றும், கட்சி கொடி வண்ணத்திலும் ஒட்டி இருக்கும் இச்சுவரொட்டிகள் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு