மதுரை: காவல் நிலையம் அருகே பரபரப்பு

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஒருவர் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அதை மீட்க வேண்டி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் நேற்று (நவ. 16) காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறையிடம் பேசி உடனடியாக நிலப் பிரச்சனை சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி