கடந்த சில ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பல்கலை நிர்வாகம் ஊதியத்தை வழங்க தொடர்ந்து கால தாமதப்படுத்தி வருவதாகவும், அதனால் இன்று பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பதிவாளர் ராமகிருஷ்ணன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால், அதற்கான உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.