மதுரை: பிரிண்ட்-இன்-பேக் வர்த்தக கண்காட்சி

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் வர்த்தக அமைப்பின் சார்பில் 'பிரிண்ட் - இன் - பேக்' எனும் வர்த்தக கண்காட்சி மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள ஐடா ஹாலில் நடைபெற்றது. 

இதில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா மற்றும் வெளிநாட்டு நுட்பங்கள் நிறைந்த நவீன பதிப்பக இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. 20 நிமிடங்களில் ஐடி கார்டு பிரிண்ட் செய்யும் இயந்திரம், புதிய தொழில் முனைவோருக்கான நவீன சோலார் இயந்திரங்கள் வீடு மற்றும் தொழிற்கூடங்கள் அமைக்க கண்காட்சி அரங்கத்தில் இருந்தன. 

127 அரங்குகளில் பிரிண்ட் அண்ட் பேக் தொழில் துறைக்கான கண்காட்சியில் ரூபாய் 50 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை மதிப்பிலான இயந்திரங்கள் இடம் பெற்றன. 21ம் தேதி துவங்கிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. மதுரையில் நடைபெறும் தென் தமிழகத்தில் நவீன பிரிண்ட் அண்ட் பேக் தொழில் வர்த்தகத்திற்கான கண்காட்சியில் மதுரை மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18,000 மேற்பட்ட பார்வையாளர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியின் மூலம் 100 கோடிக்கான வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி