மதுரை மாவட்டம் நிலையூர் ரஞ்சிதம் நகரில் வசிக்கும் தினகரன் என்பவரின் 16 வயது மகள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தேவஸ்தான பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (மார்ச் 30) இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவர்கள் தாய் வனிதா நேற்று (மார்ச் 31) ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.