மதுரை: கிரஷருக்கு எதிர்ப்பு.. மக்கள் போராட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு மண் தோண்டிய பொழுது விவசாயிகள் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து மண் தோண்டும் பணியை இன்று (ஜூன். 14) தடுத்து நிறுத்தினார்கள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு கனிம வளத்துறை அனுமதித்த நிலையில் சின்ன உடப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புதிய கிரசர் மண் தோண்டப்பட்டது. 

மிக ஆழமாக மண் தோண்டி பாறைகள் உடைக்கப்பட்டால் நிலத்தடி நீர் விவசாயம் பாதிக்கும் மற்றும் (கிரஷர்) வெடி வைக்கும் பொழுது கிராமப் பகுதியில் வீடுகள் அதிர்வு ஏற்படும் என்றும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு காலி செய்யும் நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். குசவபட்டி கிராம பொதுமக்களுக்கும் கிரசர் உரிமையாளருக்கும் மோதல் ஏற்படும் சூழலால் பெருங்குடி காவல் துறையினர் இருதரப்பினரையும் பேசி சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி