உலக பட்டினி தினம்.. மதுரை எம்எல்ஏ கார்த்திகேயன் பங்கேற்பு

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, மதுரை கிழக்குத்தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையாளர் வனிதா ஆகியோர் ஸ்டார் குரு சாரிட்டபிள் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி அவர்களுடன் இணைந்து ஏழை எளியவர்களுக்கு இலவச பிரியாணி வழங்கி சிறப்பித்தனர். 810 நாட்களாக தினசரி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் ஸ்டார் குருவின் சேவையை எம்எல்ஏ கார்த்திகேயன் பாராட்டினார். ஸ்டார் குரு சாரிட்டபுள் பவுண்டேஷன், அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், ஒரு மனிதன் கூட பட்டினியால் இல்லை எனும் காலம் வரும் வரை சேவை தொடரும் என்றும் குருசாமி கூறினார்.

தொடர்புடைய செய்தி