இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச். 15) நள்ளிரவு மது போதையில் வந்த சங்கரலிங்கம் முதியவர் காயம்பூவிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறில் காயம்பு கீழே விழுந்ததில் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலையில் சரவணப் பொய்கைக்கு குளிக்க வந்த பொதுமக்கள் இவரை கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சட்டையில் ரத்த கரையுடன் சுற்றி திரிந்த சங்கரலிங்கத்தை போலீசார் விசாரணை செய்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.