திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்று (மார்ச். 14) சுப்பிரமணிய சுவாமி - தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. சிறிய சப்பரத்தில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வீதி உலா வந்தனர்.
இதைத்தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெரியரத வீதி, சன்னதி தெரு, கீழரத வீதி, மேலரதவீதி வழியாக சன்னதியை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.