மதுரை: ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சௌராஷ்டிரா மக்களுக்கு பாரம்பரிய குலதெய்வமாக பாவிக்கப்பட்ட ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று (மார்ச் 17) நடைபெற்றது. 

நான்காவது காலயாக பூஜை பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீரானது கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாகஸ்தர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்பாபு, வினோத்குமார் மற்றும் சௌராஷ்டிரா குல பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ரேணுக அம்மனை தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்திலேயே முதன்முறையாக இத்திருக்கோவிலில் பரசுராமருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி