மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி இந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை இரவு 8.30 மணி அளவில் அமித்ஷா மதுரை வருகிறார்.
பின்னர் சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓய்வு விடுதியில் இரவு தங்குகிறார். (08.06.25) எட்டாம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்தை முடித்து பின்பு ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.