மதுரை ஆண்டாள்புரம் தனியார் குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற அதிகாரி நாகராஜன் (85) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் ஸ்வீடனில் வசிக்கிறார். ஒருநாள் மதிய உணவு எடுக்கப்படாததால் சந்தேகமடைந்த டெலிவரி ஊழியர், ஸ்வீடனில் உள்ள மகனுக்கு தகவல் தெரிவித்தார். நாகராஜன் போனை எடுக்காததால், அவரது மகன் மதுரை தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று கழிவறை அருகே மயங்கிய நிலையில் இருந்த நாகராஜனை மீட்டனர்.