இந்நிலையில் தீவிர முருகபக்தரும் திரைப்பட பின்னணி பாடகரும் கிராமிய இசைக்கலைஞரும் பாடகர் வேல்முருகன் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 18 நாட்கள் விரதமிருந்து முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து திருக்கோவிலில் நேற்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். பின்னர் கோவில் திருவாச்சி மண்டபத்தில் உள்ள சண்முகர் முருகன் தெய்வானை முன்பு முருகனின் பாடல்களை பாடினார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவரை கண்டதும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?