பொதுமக்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் 15 க்கும் மேற்பட்ட ஆட்டோ இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் இதே பகுதியில் வன்முறை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கார், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் கண்ணாடிகளை உடைத்து போதை இளைஞர்களின் தாக்குதலால் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.