மதுரை: சூரசம்ஹார லீலையை காண குவிந்த பக்தர்கள்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் லீலையானது ஆண்டுக்கு இருமுறை நடைபெறும், ஐப்பசி மாதம் சஷ்டி விரதத்தின் போது ஒன்றும், பங்குனி பெருவிழாவை முன்னிட்டும் இரண்டாவது முறையாக சூரசம்ஹாரம் என திருப்பரங்குன்றத்தில் 2 சூரசம்ஹாரம் லீலை நடைபெறுவது வழக்கம். கடந்த 5-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று (மார்ச் 16) சூரசம்ஹார லீலையானது இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சுப்ரமணியசுவாமி தங்க மயில் வாகனத்தில் தெய்வானை அம்மனுடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்தனர். தொடர்ந்து, சன்னதி தெருவில் அமைத்துள்ள சொக்கநாதர் கோவில் முன்பு கோவில் பட்டர் வீரபாகு சுவாமியிடமிருந்து சூரசம்ஹார லீலையை காண வந்த பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து சூரசம்ஹார லீலையானது நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி