மாலையில் பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோயில் ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடி ஏந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார்.
பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தேவானை திருக்கல்யாண வைபோகம் 18ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான 19ஆம் தேதி பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற உள்ளது.