இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி. ராசா செய்தியாளர்களை சந்தித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நாளை மதுரையில் நடைபெறுகிறது. இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என தெளிவாகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பின்பற்றக்கூடிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி மாறியிருக்கிறது.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக செயல்படும் அரசாக பாஜக திகழ்கிறது. இதன் பின்னணியில் உலகமயமாக்கலின் பெயரால் கல்விக் கொள்கையை தகர்த்து எறிகிற ஒரு அரசாக செயல்படுகிறது. இந்த ஆட்சியில் இருந்து நாட்டை காப்பாற்ற, மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம். நாடு காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறினார்.