மதுரை: அண்ணன் கண்டிப்பு; தங்கை தற்கொலை

மதுரை அருகே சிந்தாமணி ரோடு ராஜம்மான் நகர் கண்மாய்கரை பகுதியைச் சேர்ந்த 29 வயது உமாதேவி, திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை என்று அண்ணன் கண்டித்ததால் மனமுடைந்த அவர், நேற்று (நவ. 6) வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்று உயிரிழந்தார். இதுகுறித்து கீரைத்துரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி