மதுரை விமான நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக இன்று (மார்ச் 3) காலை மின்னஞ்சல் வந்ததையடுத்து, விமான நிலைய இயக்குனர் மத்திய தொழில் பாதுகாப்பு படை, துணை கமாண்டண்ட் மற்றும் மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வாகன சோதனை மையம் உள்ளிட்ட இடங்களில் தமிழகப் போலீசாரும் இணைந்து தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். பின்னர், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி எனத் தெரியவந்தது.