மதுரை: பாஜகவில் 5 ஆயிரம் இளைஞர்கள் இணையும் நிகழ்வு

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வலையங்குளம் பகுதியில் இன்று (ஜூன் 14) பாஜக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி ராஜா தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து 5000 இளைஞர்கள் பாஜகவில் இணையவுள்ளனர். மதுரை வலையங்குளம் தனியார் மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதன் அடிப்படையில் பாஜக நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 5000 பேர் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி தலைமையில் பாஜகவில் இணைகிறார்கள். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி