மதுரை; ஜல்லி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் தனியார் குடோனுக்கு ஜல்லி ஏற்றி வந்துள்ளனர். இன்று (ஜூலை 31) ஜல்லியை குடோனில் கொட்டுவதற்காக லாரி பின்னோக்கிச் சென்றபோது குடோனின் நுழைவுவாயிலில் கழிவுநீர் செல்வதற்காகப் போடப்பட்டுள்ள கான்கிரீட் ஸ்லாப் உடைந்து லாரியின் பின் சக்கரம் கழிவுநீர் கால்வாயின் உள்ளே இறங்கி எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி