மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த தர்மராஜ் (75) தனது மகள் திவ்யா மலேசியாவில் மேற்படிப்பு செல்வதாக நினைத்து பணம் அனுப்பி வந்துள்ளார். ஆனால், திவ்யா அனுப்பானடியைச் சேர்ந்த பிரகாஷை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் திருநகரில் அவருடன் குடும்பம் நடத்தி, இரண்டரை வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.