மதுரை: காதலித்து திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை விநாயகர் நகரை சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி பூர்ணிமா பிரியா (34). இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பூர்ணிமா பிரியா நேற்று (மார்ச். 13) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி