இதே போல் ஆண்கள் பிரிவு ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது இதுவே முதல் முறை. இந்திய ரோலர் ஸ்கேட்டிங் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த 32 வீரர்கள் ரோலர் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகளில் பெண்கள் மற்றும் சீனியர் ஆண்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (ஆக. 1) காலை டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனை யோகிதா மற்றும் பயிற்சியாளர் அலெக்ஸ் பேசினார்.