திருப்பரங்குன்றம் கிரிவலம் சென்றபோது தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். ஆன்மீகம் செழிக்கவும், ஆன்மீகத்திற்கும் சனாதான தர்மத்திற்கும் எதிராக இருப்பவர்கள் ஆட்சியை அகற்றவும் கிரிவலம் வருகிறேன். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அரசு கடைப்பிடிக்க வேண்டும். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. துணை முதல்வர் பதவி குறித்து பாஜக சார்பில் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. NDA ஆட்சிக்கு வந்தால் இபிஎஸ் தான் முதல்வர் என்று அவர் கூறினார்.