மதுரை தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நேற்று (ஜன. 10) திருப்பரங்குன்றம் தொகுதி திருநகர் பகுதியில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் இப்போட்டியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி, விளையாட்டு அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.