திருப்பரங்குன்றம் கோயிலை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்பு படை

பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 1ஆம் தேதி மதியம் மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கு அரசு விழாவில் பங்கேற்று, பின்னர் திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து மண்டேலா நகரில் நடைபெறும் பாஜக மாநாட்டில் கலந்துகொள்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு படையினர் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று (பிப். 25) மாலை மதுரை மாநகர ஆணையர் லோகநாதன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் திருப்பரங்குன்றம் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி