திருப்பரங்குன்றத்தில் நேற்று (மார்ச். 2) மாலை, நூற்றுக்கணக்கான இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, கைகளில் வேல் ஏந்தி 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என கோஷமிட்டனர். மலைக்கு மேல் தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கோயில் முன்பு மகா தீபாராதனை நடத்தி, கிரிவலப் பாதையில் ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.