பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று (பிப். 16) மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம், மகளிருக்கு ரூ.5,000 வழங்கியுள்ளது குறித்தும், சிறப்பு கோடைக்கால நிதியாக ரூ.2,000 கொடுத்திருப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "அதை வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள்" என்று கூறினார்.