மதுரை: அதிமுக பிரமுகர் கொலை; மனைவி கைது

அதிமுக பிரமுகர் செந்தில் கொலை தொடர்பாக சிலைமான் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்திலின் மனைவி காவியா, அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. கணவர் கண்டித்ததால் காவியா தாய் வீட்டிற்கு சென்றார். கணவர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலுடன் நிம்மதியாக வாழ முடியாது என நினைத்த காவியா, கார்த்திக் மற்றும் மேலும் ஒருவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி