டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று (பிப். 22) காலை துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் வரவேற்றனர். பின்னர், துணை குடியரசுத் தலைவர் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டுச் சென்றார்.