மதுரை விமான நிலையத்திற்கு இன்று (பிப். 7) காலை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை, சுமார் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சந்தித்து, சம்பள தாமதம் மற்றும் ஊதிய உயர்வு பிரச்சனை குறித்து மனு அளித்தனர். இது தொடர்பாக, வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி நீதி கேட்டு, சென்னை DMS 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.